/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் விழிப்புணர்வு; ஏற்றுமதியாளர் முன்முயற்சி
/
புற்றுநோய் விழிப்புணர்வு; ஏற்றுமதியாளர் முன்முயற்சி
புற்றுநோய் விழிப்புணர்வு; ஏற்றுமதியாளர் முன்முயற்சி
புற்றுநோய் விழிப்புணர்வு; ஏற்றுமதியாளர் முன்முயற்சி
ADDED : ஆக 23, 2024 10:40 PM

திருப்பூர்;திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் அங்கமான தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பு (டி.எஸ்.எப்.,) மற்றும் பெண் தொழில்முனைவோர் துணைக்குழு சார்பில், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பி.என்.டி., இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தில் நடந்தது. ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். பி.என்.டி., இன்னோவேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் சேது மாதவன் வரவேற்றார். ஏற்றுமதியாளர் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி பேசினார்.
பெண் தொழில்முனைவோர் துணைக்குழு தலைவர் சுமிதா, உறுப்பினர் சுகந்தி, மகப்பேறு மருத்துவர் அனிதா, திருமுருகன்பூண்டி ரோட்டரி தலைவர் கார்த்திகேயன், திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ராம் உள்ளிட்டோர் பங்கேற்னர்.
ஏற்றுமதியாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் திருக்குமரன் பேசுகையில், ''திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், டி.எஸ்.எப்., மற்றும் ரோட்டரியின் பெண் தொழிலாளர்களுக்கான வருமுன் காப்போம் முயற்சியாக இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்,''' என்றார்.
-----
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின், தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பு மற்றும் பெண் தொழில்முனைவோர் துணைக்குழு சார்பில், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.