/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியின்றி பேரணி அ.தி.மு.க., மீது வழக்கு
/
அனுமதியின்றி பேரணி அ.தி.மு.க., மீது வழக்கு
ADDED : ஏப் 18, 2024 01:27 AM
தாராபுரம், தாராபுரத்தில், அனுமதியின்றி வாகன பேரணி சென்ற, அ.தி.மு.க.,வினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாரா
புரத்தில் தேர்தல் பிரசார நிறைவு நாளான நேற்று பேரணி நடத்த பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் அனுமதி கேட்டு இருந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ., கூட்டணி கட்சியினர் பேரணியை ரத்து செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணியளவில் தாராபுரம், பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் பணிமனை முன், 60க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து, அமராவதி சிலை, பூக்கடை கார்னர், பெரிய கடை வீதி, டி.எஸ். கார்னர், ஐந்து சாலை சந்திப்பு, பார்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். உரிய அனுமதியின்றி பேரணி சென்றதாக, அவர்கள் மீது தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

