/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மத்திய - மாநில அரசு ஆர்டர்கள் விசைத்தறிக்கே வழங்க வேண்டும்'
/
'மத்திய - மாநில அரசு ஆர்டர்கள் விசைத்தறிக்கே வழங்க வேண்டும்'
'மத்திய - மாநில அரசு ஆர்டர்கள் விசைத்தறிக்கே வழங்க வேண்டும்'
'மத்திய - மாநில அரசு ஆர்டர்கள் விசைத்தறிக்கே வழங்க வேண்டும்'
ADDED : மே 16, 2024 05:33 AM

பல்லடம், : திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பல்லடம் அருகே, கே. ஐயம்பாளையம் கிராமத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு, அதன் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துக்குமாரசாமி வரவேற்றார். கிளை சங்க நிர்வாகிகள் செல்வகுமார், கோபால், பத்மநாபன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்:
கடந்த, 2022ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை மீறி கூலி குறைத்து வழங்கப்படுகிறது. 2014ல் மேற்கொள்ளப்பட்ட கூலியை விட குறைவாக வழங்குவதை விசைத்தறி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஒப்பந்தப்படி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். இதுகுறித்து செய்தித்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்த வேண்டும். விசைத்தறி மூலப்பொருளான பாவு நுால் சரிவர கிடைக்காததாலும், கூலி குறைக்கப்படுவதாலும், 30 சதவீத விசைத்தறிகள் உடைக்கப்பட்டு பழைய இரும்புக்கு விற்கப்படுகின்றன. இந்த அவல நிலை மாறி, எஞ்சி உள்ள விசைத்தறிகளை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்புத்துறை, காவல் துறை, சுகாதாரம் மற்றும் ராணுவ துறைகளுக்கு தேவையான சீருடைகள், துணிமணிகள், இலவச வேட்டி சேலைகள் ஆகிய அனைத்து ஆர்டர்களையும் விசைத்தறிகளுக்கே வழங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாக மாற்ற வேண்டி நுாறு சதவீத மானியத்தை மத்திய- மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.