ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
தி.மு.க., மாவட்ட அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்ட அமைப்பிலும் மாற்றம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, திருப்பூர் மத்திய மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு தொகுதிகள்; கிழக்கு மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம்; வடக்கு மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம்; தெற்கு மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை வடக்கு மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, அவிநாசி; மத்திய மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகள் இருந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ள கட்சி தலைமை, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை, 15 நாட்களுக்குள் அனுப்ப மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
