ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட காங்கயம்பாளையம் புதுார் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், “காங்கயம்பாளையம் புதூர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அருகில் உள்ள வீதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எங்கள் பகுதிக்கு இதுவரை வசதி ஏற்படுத்தப்படவில்லை. மேலும், குடிநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்படாததால், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளனர்.
–––
மனு அளித்த காங்கயம்பாளையம்புதுார் பகுதி மக்கள்.
