/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டம் முழுக்க 13 ஆர்.ஐ.,கள் மாற்றம்
/
மாவட்டம் முழுக்க 13 ஆர்.ஐ.,கள் மாற்றம்
ADDED : ஜூன் 25, 2024 12:56 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) நிலையில் உள்ள, 13 பேரை பல்வேறு இடங்களுக்கு நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ., ஜெய்பீம் உத்தரவிட்டார்.
அதில், உடுமலை பெதப்பம்பட்டி ஆர்.ஐ., சசிகலா சேவூருக்கும், தேர்தல் பிரிவு முதுநிலை ஆர்.ஐ., பாலாஜி பெதப்பம்பட்டி நில ஆர்.ஐ.,யாகவும், தாராபுரம் பாஸ்கரன் ஊதியூருக்கும், பொங்கலுார் பிரியங்கா திருப்பூர் தெற்குக்கும், லோகேஷ்குமார் நல்லுருக்கும், திருப்பூர் தெற்கு கார்த்திக் தாராபுரத்துக்கும், திருப்பூர் வடக்கு சிவநந்தினி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், ஊதியூர் சந்திரகலா பல்லடத்துக்கும், பல்லடம் செல்லதுரை திருப்பூர் கோட்ட கலாலுக்கும், அவிநாசி அனிதா திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கும், தாராபுரம் சரவணன் தேர்தல் பிரிவுக்கும், திருப்பூர் தெற்கு கலையரசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், சேவூர் திவ்யா திருப்பூர் தெற்குக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.