ADDED : ஜூலை 25, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருப்பூர் மண்டல முன்னாள் மேலாளர் சின்னுசாமி, சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
வாணிப கழக மாவட்ட மேலாளர் (சில்லரை விற்பனை) சுப்பிரமணியன், தர்மபுரிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக செல்கிறார். அவருக்கு பதிலாக, கோவை தெற்கு ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் கலால் உதவி கமிஷனர் ராம்குமார், கோவை தெற்கு ஆர்.டி.ஓ., வாக மாறுதல் செய்யப்பட்டார்

