/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்கன் பிரியாணி ரூ.80 - மட்டன் பிரியாணி ரூ.120 மாவட்ட நிர்வாகம் விலைப்பட்டியல்
/
சிக்கன் பிரியாணி ரூ.80 - மட்டன் பிரியாணி ரூ.120 மாவட்ட நிர்வாகம் விலைப்பட்டியல்
சிக்கன் பிரியாணி ரூ.80 - மட்டன் பிரியாணி ரூ.120 மாவட்ட நிர்வாகம் விலைப்பட்டியல்
சிக்கன் பிரியாணி ரூ.80 - மட்டன் பிரியாணி ரூ.120 மாவட்ட நிர்வாகம் விலைப்பட்டியல்
ADDED : மார் 21, 2024 11:31 AM
திருப்பூர்;லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினத்துக்கான விலை பட்டியலை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வாக்காளரை வசப்படுத்துவதற்காக, அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் சார்பில், வாகன பிரசாரம், தெருமுனை பிரசாரம், பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்படும் மேடை, மைக்செட், டேபிள், சேர் வாடகை; தண்ணீர் பாட்டில், வி.ஐ.பி.,க்களை வரவேற்க வெடிக்கப்படும் பட்டாசு ரகங்கள், டிரம்ஸ் வாத்தியம், முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிவிப்பது, தொண்டர்களுக்கு பரிமாறப்படும் சைவ, அசைவ உணவு என ரகங்கள் என அனைத்தும், தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
நடப்பு லோக்சபா தேர்தலில், ஒரு வேட்பாளர் அதிகபட்சம், 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பாளர்கள், உரிய காலத்துக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம்.
திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், விலை பட்டியல் தயாரித்துள்ளது.
ஏற்கனவே தயாரித்த பட்டியலில், பிரியாணி, 250 ரூபாயாக விலை அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தற்போது புதிய விலை பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இட்லி ஒன்றுக்கு 10 ரூபாய்; சாப்பாடு - 50 ரூபாய்; லெமன்சாதம், தக்காளி, தயிர், புளி, சாம்பார் சாதம் தலா - 55 ரூபாய். மட்டன் பிரியாணி - 120; சிக்கன் பிரியாணி - 80 ரூபாய். டீ - 10; காபி - 15 ரூபாய்; சமோசா - 10 ரூபாய்.
பத்து நபர் கொண்ட டிரம்ஸ் குழுவுக்கு தினமும், 11 ஆயிரம் ரூபாய்; மாநகராட்சி பகுதியில் திருமண மண்டப வாடகை, (500 நபர்களுக்கு மேல்) 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்; 500 நபர்கள் வரை, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்; 100 நபர்களுக்கு மேல் 15 ஆயிரம் ரூபாய்.
மேடை பந்தல் ஒரு சதுர அடிக்கு 400; பிளாஸ்டிக் சேர் தினமும், 10 ரூபாய், வி.ஐ.பி., சேர் - 200, மைக் ஸ்டாண்ட் - 450. ஏ.சி., கார் (12 மணி நேர பயன்பாட்டுக்கு) 3,500; சாதாரண காருக்கு, 3,000; ஆட்டோ வாடகை, 3,500; டெம்போ டிராவலர் - 5 ஆயிரம் ரூபாய் வாடகை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

