ADDED : ஜூலை 23, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், சேவூர் ஸ்ரீ சிவசக்தி மஹாலில் நடைபெற்றது. இதில் சேவூர், தத்தனூர், போத்தம்பாளையம், புலிப்பார் மற்றும் பாப்பாங்குளம் ஆகிய ஊராட்சி பொதுமக்களுக்கு, பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் தங்களுக்குரிய முகாம்களை அமைத்திருந்தனர்.
'தாட்கோ' சார்பில் தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். முகாமை பார்வையிட்டு அந்தந்த துறை ரீதியாக மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினர்.