/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் மருந்தகம் கலெக்டர் திடீர் ஆய்வு
/
முதல்வர் மருந்தகம் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : மார் 07, 2025 03:48 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 13; தனிநபர் தொழில்முனைவோர் மூலம் 4 என, 17 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்வர் மருந்தகங்களின் இயக்கம் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு நடத்தினார். பல்லடம் தாலுகா, மங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தில், மருந்து இருப்பு, விற்பனை, செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் கலெக்டர் கூறியதாவது:
நம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், பழங்கரை, சோமவாரப்பட்டி, ருத்திராபாளையம், முத்துார், வெள்ளகோவில், தளி, ஊத்துக்குளி, அவிநாசி, சின்னவீரம்பட்டி, கரடிவாவி, மங்கலம், சிவன்மலை, பெருமாநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், திருப்பூரில் வெள்ளியங்காடு, அவிநாசியில் சுள்ளிபாளையம், உடுமலையில் வல்லகுண்டாபுரம், ஊதியூரில் குண்டடம் பகுதிகளில் தனியார் தொழில்முனைவோர் மூலம் முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன.
வெளி சந்தையை விட, இம்மருந்தகங்களில் 25 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் ஜெனிரிக் மருந்துகள், பிரான்டட் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள், இச்சலுகைகளை பயன்படுத்தி, குறைந்த விலையில் தரமான மருந்துகளை வாங்கி பயன்பெறவேண்டும், என்றார்.
தொடர்ந்து, பல்லடம் ஒன்றியம், பூமலுார் ஊராட்சி, வலையபாளையம் அங்கன்வாடி மையத்துக்கு சென்ற கலெக்டர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.