/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை அடித்துக்கொலை 'போதை' தந்தைக்கு கம்பி
/
குழந்தை அடித்துக்கொலை 'போதை' தந்தைக்கு கம்பி
ADDED : ஆக 18, 2024 02:12 AM

பல்லடம்,:திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம் ரோடு, அய்யர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 45; தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது மனைவி சரோஜா, 38. ஜூன் 10ம் தேதி, சரோஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு, பணத்துக்காக மணிகண்டன் விற்றதாக கூறப்பட்டது.
விசாரித்த பல்லடம் போலீசார், குழந்தையை மீட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த, 13ம் தேதி மது அருந்தி வந்த மணிகண்டன், வீட்டிலிருந்த இரண்டு மாதமே ஆன தன் குழந்தையை அடித்துள்ளார். குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த சரோஜா, பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், மணிகண்டனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இறந்தது. மணிகண்டன் மீது கொலை வழக்கு பாய்ந்தது.