/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேசிய விருதில் இடம்பெறாத குழந்தைகள் திரைப்படங்கள்'
/
'தேசிய விருதில் இடம்பெறாத குழந்தைகள் திரைப்படங்கள்'
'தேசிய விருதில் இடம்பெறாத குழந்தைகள் திரைப்படங்கள்'
'தேசிய விருதில் இடம்பெறாத குழந்தைகள் திரைப்படங்கள்'
ADDED : ஆக 19, 2024 11:27 PM

திருப்பூர்:திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் திருப்பூர் மத்திய அரிமா சங்கம் சார்பில், குரங்குப்பெடல் திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.திருப்பூர் முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், தலைமை வகித்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், நாதன் ரகுநாதன் ஆகியோர் பேசினர். மத்திய அரிமா சங்க தலைவர் சண்முகம், செயலாளர் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுப்ரபாரதி மணியன் எழுதிய, திரைக்கதை நுால் வரிசை-7 வெளியிடப்பட்டது. திரைப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பேசினார்.குரங்குப்பெடல் திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணன் பேசுகையில், ''இந்த ஆண்டு, தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் குழந்தை திரைப்படங்கள் இடம் பெறவில்லை. இன்றைக்கு தேசிய சினிமா விருது பட்டியலில், குழந்தைகள் திரைப்படம் இல்லாமல், வெகுஜன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது; குழந்தைகள் திரைப்படங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது, ஏற்புடையதாக இல்லை'' என்றார்.-
விருதுகளுடன் குறும்படம், ஆவணப்படக் கலைஞர்கள்.