/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் செயின் பறிப்பு
/
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : ஏப் 30, 2024 11:39 PM
பல்லடம்;பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை, அருள்ஜோதி நகரை சேர்ந்த பால்பாண்டி மனைவி சரண்யா 35. பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கிறார். கடந்த, 29ல், மதிய உணவு இடைவேளையின் போது சரண்யா வீட்டுக்கு சென்றார்.
சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், சரண்யாவின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி, கை கால்களை கட்டி, சரண்யா கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரண்யா பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரித்த தில், இச்சிப்பட்டியை சேர்ந்த லோகராஜ், 25 மற்றும் கோம்பக்காட்டுபுதுாரை சேர்ந்த தாமரைக்கண்ணன், 29 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், லோகராஜ் என்பவர் ஏற்கனவே சரண்யாவுடன் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, திட்டமிட்டு, கைவரிசையை காட்டியுள்ளனர். இருவரும், ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.