/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னச்சாமி அம்மாள் பள்ளிக்கு 'சறுக்கல்'
/
சின்னச்சாமி அம்மாள் பள்ளிக்கு 'சறுக்கல்'
ADDED : மே 11, 2024 12:33 AM
திருப்பூர்:பிளஸ் 2 தேர்வு முடிவில் மாவட்டத்திலேயே குறைந்த பட்ச தேர்ச்சி சதவீதம் பெற்றது, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. தேர்வெழுதிய, 152 மாணவர்களில், 112 பேர் தேர்ச்சி பெற்றனர்; 36 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 76.32. முந்தைய ஆண்டை விட (91.01) தேர்ச்சி சதவீதம், 14.69 குறைந்தது.
நேற்று வெளியாகிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் மாநகராட்சி பள்ளி அளவில் குறைந்தபட்ச தேர்ச்சியை சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளியே பெற்றுள்ளது. 179 மாணவர் தேர்வெழுதி, 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 58 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 67.60.கடந்த, 2023 ல் இப்பள்ளியில், 219 மாணவர் தேர்வெழுதினர்.
இவர்களில், 195 பேர் தேர்ச்சி பெற்றனர். 24 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 89.04. இம்முறை, 21.44 தேர்ச்சி சதவீதம் குறைந்து, 67.60 சதவீதம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.