/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் படம் எடுத்த நாகப்பாம்பு; ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்
/
மாநகராட்சி அலுவலகத்தில் படம் எடுத்த நாகப்பாம்பு; ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்
மாநகராட்சி அலுவலகத்தில் படம் எடுத்த நாகப்பாம்பு; ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்
மாநகராட்சி அலுவலகத்தில் படம் எடுத்த நாகப்பாம்பு; ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்
ADDED : மார் 01, 2025 06:34 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று எலியை வேட்டையாடிய நாகப்பாம்பைக் கண்டு அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.
திருப்பூர், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி மைய அலுவலகம் அமைந்துள்ளது.
ஜம்மனை ஓடையின் கரையில் இதன் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. ஓடைக்கரையில் புதர்கள் இருப்பதால், விஷ ஜந்துகள் அடிக்கடி இந்த வளாகத்தினுள் எளிதில் வந்து செல்வது சகஜமாக உள்ளது.
கழிப்பிடத்தின் மேற்பகுதியில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டத்தை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இது தவிர பெருச்சாளியின் நடமாட்டமும் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஏழு அடி நீள நாகப் பாம்பு, ஜெனரேட்டர் அறையை ஒட்டியுள்ள பகுதியில் காணப்பட்டது.
அங்கு வந்த ஒரு பெருச்சாளியை பாம்பு தனது வாயில் கவ்வியபடி இரையாக்க முயன்றது.
பின், அதைக் கவ்விக்கொண்டு அங்கிருந்து சற்று தள்ளி புதராக இருந்த பகுதியை நோக்கிச் சென்றது.
ஆள் அரவம் கேட்டு அந்த பாம்பு சற்று சுதாரித்த போது, பெருச்சாளி பாம்பிடமிருந்து தப்பியது. பின்னர் பாம்பு அதை பிடிக்க முயன்று சிறிது நேரம் முயற்சித்தது.
பெருச்சாளி தப்பிய நிலையில், பாம்பு அங்குள்ள 12 அடி உயர சுவற்றில் ஏறி செல்ல முயன்றது.
சிறிது நேரம் முயன்றும் சுவற்றை தாண்டமுடியாமல் அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில், பாம்பின் நடமாட்டம் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.