/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத்துறை அழைப்பு
மானிய விலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத்துறை அழைப்பு
மானிய விலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஆக 13, 2024 02:15 AM

உடுமலை;மடத்துக்குளம் வட்டாரத்தில், தோட்டக்கலைத்துறை வாயிலாக, விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. புதிதாக தென்னை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஒரு ஹெக்டேருக்கு, ரூ.12 ஆயிரம் மதிப்பில், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நெட்டை ரக தென்னங்கன்றுகள், ஊடுபயிராக சாகுபடி செய்ய தட்டைப் பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு ஹெக்டேருக்கு, 175 தென்னங்கன்றுகள் வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, இரண்டு ஹெக்டேர் வரை வழங்கப்படும்.
மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, 17 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தென்னங்கன்று மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல் வங்கிக்கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, மடத்துக்குளம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், தோட்டக்கலை அலுவலர் காவிய தீப்தினி 99521 47266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.