/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விவசாய சங்கம் வலியுறுத்தல்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விவசாய சங்கம் வலியுறுத்தல்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விவசாய சங்கம் வலியுறுத்தல்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விவசாய சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2024 01:01 AM
பல்லடம்;பல்லடத்தில் நடந்த பா.ஜ., சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையிடம், உ.உ.க., மாநிலத் தலைவர் செல்லமுத்து மற்றும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ஆகியோர், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதில், 60 ஆண்டு களாக கிடப்பில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள -அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தென்னை விவசாயிகளை பாதுகாக்க, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். விளை பொருட்களுக்கு ஆதரவு விலை கிடைக்கச் செய்தல், கள்ளுக்கான தடை நீக்குதல், தமிழக அரசு மூலம் வழங்கப்படும் மானியத்தை விவசாயி களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
''அதிகாரம் கையில் இல்லாததால், விவசாயி களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது; ஆட்சிக்கு வந்ததும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்'' என்றார் அண்ணாமலை.

