/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னங்கன்று தேர்வு கூடுதல் கவனம் தேவை
/
தென்னங்கன்று தேர்வு கூடுதல் கவனம் தேவை
ADDED : ஆக 01, 2024 01:28 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
தென்னை ஆராய்ச்சி நிலையத்தினர், தென்னை விவசாயிகளுக்கு அவ்வப்போது பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.'திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னைக்கான தகுந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. முறையான தொழில்நுட்பங்களை பின்பற்றினால் தென்னையை லாபகரமான பயிராக பராமரிக்க முடியும். தென்னை நீண்ட கால பயிராக இருப்பதால், நாற்று தேர்வு, மண் மற்றும் நீர் வளம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.அனைத்து வகை மண்ணிலும் தென்னை வளர்ந்தாலும், கார, அமிலத்தன்மை அதிகமான நிலங்களில் பாதிப்பு அதிகமிருக்கும்.
எனவே, நாற்று தேர்விலும் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை அடிப்படையில், தங்கள் மண்ணுக்கு தகுந்த நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.