sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு

/

கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு

கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு

கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு


ADDED : ஆக 02, 2024 12:57 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் (எண்: 06181) இந்தாண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது; இரண்டு முறை நீட்டிப்பு செய்யப்பட்டது.

முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து, பயணிகள் எண்ணிக்கையும் கூடி வருவதால், ரயில் இயக்கம் செப்., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆக., 1 முதல் செப்., 26 வரை வியாழன் தோறும் கோவையில் இருந்து, அதிகாலை, 2:30க்கு ரயில் புறப்பட்டு, சனிக்கிழமை (மூன்றாவது நாள்) காலை, 11:30 மணிக்கு பகத் கீ கோதி செல்லும். ஆக., 4ம் தேதி முதல், செப்., 29ம் தேதி வரை ஞாயிறுதோறும் பகக் கீ கோதியில் இருந்து இரவு, 7:30 மணிக்கு புறப்படும் ரயில், வியாழன் காலை, 9:30 மணிக்கு கோவை வந்தடையும்.

ரயிலில் 6 ஏ.சி., முதல் வகுப்பு படுக்கை வசதி, 12 முன்பதிவு படுக்கை வசதி, 3 பொது பெட்டிகள் இடம்பெறும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஸ்டேஷன்களில் நின்று, வட மாநிலங்கள் வழியாக பயணிக்கும்.






      Dinamalar
      Follow us