/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உருக்குலைந்த நீர்வழித்தடங்கள்! ஊராட்சி நிர்வாகங்கள் விழிக்குமா?
/
உருக்குலைந்த நீர்வழித்தடங்கள்! ஊராட்சி நிர்வாகங்கள் விழிக்குமா?
உருக்குலைந்த நீர்வழித்தடங்கள்! ஊராட்சி நிர்வாகங்கள் விழிக்குமா?
உருக்குலைந்த நீர்வழித்தடங்கள்! ஊராட்சி நிர்வாகங்கள் விழிக்குமா?
ADDED : மே 30, 2024 12:43 AM

திருப்பூர் : 'ஊரக பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
'நகர, கிராமப்புறங்களில் நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் தடையின்றி வழிந்தோடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது, ஐகோர்ட் வழிகாட்டுதல்.
ஆனால், திருப்பூரில், கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊரகப்பகுதிகளில், ரோட்டோரம் உள்ள நீர் வழித்தடங்கள் உருக்குலைந்திருக்கின்றன.
பெரும்பாலான கிராமப்புற ரோடுகள், நல்ல முறையில் புதுப்பிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், மழைநீர்வழிந்தோடி செல்லும் வடிகால், புல், புதர் மண்டி வளர்ந்துக் கிடக்கின்றன.
இதனால், மழைக் காலங்களில், அந்த வடிகாலை ஒட்டி வழிந்தோடி வரும் மழைநீர் தடைபட்டு, திசைமாறி சாலையில் பெருக்கெடுக்கிறது. அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிப் பகுதிகளில், இத்தகைய நிலை காணப்படுகிறது.
திருப்பூர் முத்தணம்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட சில ஊராட்சிகளில், கான்கிரீட் மழைநீர் வடிகால் கட்டமைப்பு இருப்பினும், அவற்றில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. பருவமழை துவங்கும் முன், கிராமப்புறங்களில் உள்ள நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும்.
தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் வாயிலாக, சிறியளவில் புதர் மண்டிக்கிடக்கும் நீர் வழித்தடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.