நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று பார்வையிட்டார். மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, ஊத்துக்குளி தாசில்தார் ராகவி ஆகியோர் உடனிருந்தனர்.
கலெக்டர் கூறியதாவது:
நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் ஆண்டு முழுவதும் இந்த குளத்துக்கு வந்து செல்கின்றன. 186 வகையான பறவைகள் வந்து செல்வதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
குளத்தை மேம்படுத்தவும், பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.