/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : மார் 13, 2025 06:52 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 17 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அம்மருந்தகங்களில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு நடத்திவருகிறார்.
அவ்வகையில், நேற்று வெள்ளியங்காடு பகுதியில் உள்ள மருந்தகத்துக்கு சென்ற கலெக்டர், மருந்து இருப்பு, அனைத்து மருந்துகளும் உள்ளனவா, விலை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
'முதல்வர் மருந்தகங்களில், 25 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் ஜெனிரிக் மருந்துகள் மற்றும் பிரான்டட் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை பயன்படுத்தி, மக்கள் குறைவான விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறவேண்டும்' என, கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் சரவணக்குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.