/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்
/
கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்
கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்
கல்லுாரி நிறுவனர் நாள் விழா: மாணவியருக்கு பரிசு வழங்கல்
ADDED : மார் 06, 2025 12:15 AM
உடுமலை:
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் முருகேசன், 'கம்பன் உணர்த்தும் அறங்கள்' என்ற தலைப்பில் பேசினார்.
கல்லுாரி ஆலோசகர் மஞ்சுளா, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். கல்லுாரி நிறுவனரின் சிறப்புகளை போற்றும் வகையில், கல்லுாரி இசைக்குழுவினர் பாடல் பாடினர்.
பிளஸ் 2 வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி பேரவை மாணவ துணைச்செயலாளர் முனவரா பர்வீன் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி பேரவை ஒருங்கிணைப்பாளர் கலாவதி மற்றும் பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.