/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலை நிகழ்ச்சிகளால் கல்லுாரி விழா அமர்க்களம்
/
கலை நிகழ்ச்சிகளால் கல்லுாரி விழா அமர்க்களம்
ADDED : ஏப் 28, 2024 01:00 AM

திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் மகளிர் கல்லுாரி ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் ஹேமலதா வரவேற்றார். கல்லுாரி சேர்மன் அர்த்தனாரீஸ்வரர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
சத்தியமங்கலம், காமதேனு கலைக் கல்லுாரி செயலாளர் அருந்ததி, கோவை, ஜி.எம்.ஏ.சி., அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
கல்லுாரி நிர்வாக இயக்குனர் நிர்மல்ராஜ், கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் முத்துரத்தினம், திருப்பூர் நிட்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி ஆண்டு விழாவை முன்னிட்டு ஆண்டு மலர், குறுந்தகடு, வீடியோ வெளியிடப்பட்டது. புதுவையில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இரண்டாமிடம் பெற்ற, பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவி, தேவிஸ்ரீயோகசானம் செய்து பார்வையாளர்களின் பாராட்டு பெற்றார்.
பல்கலை மற்றும் கல்லுாரி அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியர், நுாறு சதவீத வருகைப்பதிவு மாணவியர், பல்வேறு கலை, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர் உள்ளிட்டோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கலையாஞ்சலி போட்டியில், பி.காம்.,சி.ஏ., மாணவியர் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றினர். தொடர்ந்து, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவியர் மன்ற சேர்மன் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

