/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி தரவரிசை ஏ.வி.பி., முதலிடம்
/
கல்லுாரி தரவரிசை ஏ.வி.பி., முதலிடம்
ADDED : ஆக 19, 2024 11:49 PM

திருப்பூர்:மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு சிறப்பாக பணியாற்றிய கல்லுாரிகளின் தரவரிசைப்பட்டியலில், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலிடம் பெற்றது.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தின் மாநில அளவிலான கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு சிறப்பாக பணியாற்றிய கல்லுாரிகளின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.இதில், மாநில அளவிலான கலை அறிவியல் கல்லுாரி பிரிவில், திருப்பூர், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலிடம் பெற்று, அதற்கான விருதை, கல்லுாரி முதல்வர் கதிரேசன், கல்லுாரி வேலை வாய்ப்பு அதிகாரி ஹரிகிருஷ்ணன் ஆகியோர், அமைச்சர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.இதற்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை ஏ.வி.பி., கல்லுாரி நிர்வாக தலைவர் கார்த்திகேயன், பள்ளி செயலாளர் லதா ஆகியோர் பாராட்டினர்.--