ADDED : ஏப் 27, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. வணிகவியல் துறை தலைவர் செல்வதரங்கிணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் நளதம், தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக தெற்கு ரோட்டரி இன்னர்வீல் தலைவர் ராஜாத்தி பங்கேற்று பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் பிரசன்னா, அறிக்கை சமர்ப்பித்தார்.
மாணவி நிஷா, நன்றி கூறினார்.

