/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
/
கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 21, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:மத நல்லிணக்கம் முன்னிட்டு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 சார்பில், கல்லுாரி வளாகத்தில், நல்லிணக்க தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்து, மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினார். இந்நாளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வையும் மாணவர்கள் பெற வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., அலகு - 2 திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித் தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர்கிருஷ்ணன் செய்திருந்தார்.