ADDED : ஜூலை 01, 2024 02:00 AM
திருப்பூர்;ஜெய்வாபாய் பள்ளி வீதி, மாநகராட்சி வணிக வளாகம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம், ஜெய்வாபாய் பள்ளி வீதியில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இதன் சுவர்கள் மற்றும் தரை மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.
மேலும், இவ்வளாகத்துக்கு பாதுகாப்பாக முன்புறத்தில் கேட் இல்லை. திறந்த நிலையில் கிடந்த வளாகம் என்பதால் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது.இரவு நேரங்களில் போதை ஆசாமிகள், சமூக விரோத நபர்கள் இவ்வளாகத்தில் குடியேறும் நிலை இருந்தது.
இது குறித்து கடைக்காரர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து அறிக்கை அளித்து, சீரமைப்பு பணிக்கு ஒப்புதல் பெற்றனர்.
அதன் பேரில், இவ்வளாகத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, முன்புறம் புதிதாக கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது.