/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை அமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., நடைபயணம்
/
சாலை அமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., நடைபயணம்
ADDED : ஜூலை 16, 2024 12:43 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி சாமந்தங்கோட்டையில் இருந்து சென்னிமலை கவுண்டம்புதுார் வரை ஓராண்டுக்கு முன், நீலகிரி எம்.பி., ராஜா, சாலை அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
ஆனால், தற்போது வரை சாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் உடனடியாக பணிகளை துவங்க வலியுறுத்தி, வஞ்சிபாளையம் பகுதி மா.கம்யூ., கிளைகள் சார்பில் நடைபயண போராட்டம் நடைபெற்றது. நிர்வாகி மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்முத்துசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
நடைபயணத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உன்னிகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
மா.கம்யூ., நிர்வாகிகளுடன், பி.டி.ஓ., விஜயகுமார் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், வரும், செப்., 15ம் தேதிக்குள் பணிகளை துவக்குவதாக உறுதி கூறியதால், கட்சியினர் கலைந்து சென்றனர்.