/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மோடிஜி - '2ஜி' இடையே போட்டி: பா.ஜ., வேட்பாளர் முருகன் பேட்டி
/
மோடிஜி - '2ஜி' இடையே போட்டி: பா.ஜ., வேட்பாளர் முருகன் பேட்டி
மோடிஜி - '2ஜி' இடையே போட்டி: பா.ஜ., வேட்பாளர் முருகன் பேட்டி
மோடிஜி - '2ஜி' இடையே போட்டி: பா.ஜ., வேட்பாளர் முருகன் பேட்டி
ADDED : மார் 25, 2024 01:26 AM
அவிநாசி;நீலகிரி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக மத்திய இணையமைச்சர் முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நேற்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி லோக்சபா தொகுதியை பொறுத்தவரையில் மோடிஜியா, '2ஜி'யா என்ற போட்டி மட்டும்தான் நிலவுகிறது.
மத்திய அரசின் பத்தாண்டு கால சாதனைகளையும் மாநில அரசின் மூன்றாண்டு கால ஊழல் அவலங்களையும் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய உள்ளோம்.
பா.ஜ.,விற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை பிரதமரின் 'கோவை ரோடு ஷோ'; சேலம், திருப்பூர், நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களில் நடைபெற்ற மாநாடுகளில் திரண்ட பொதுமக்களைப் பார்த்து அறிய முடிகிறது.
நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜா மீதான '2ஜி' வழக்கு மீதான விசாரணை விரைவில் துவங்கப்பட உள்ளது. ''2ஜி வழக்கு பின்னணி உடையவர்; சனாதனத்தை, பட்டியலின மக்களின் ஒரு தரப்பை, கடவுளை அவதுாறாக பேசுபவர் நமது தொகுதி வேட்பாளராக உள்ளார்'' என நீலகிரி தொகுதி மக்கள் வெட்கி தலை குனிகின்றனர். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி. நாடு முழுதும் 400 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி நிச்சயம்.'2ஜி' வழக்கு உயிர் பெற்றுள்ளது தி.மு.க., வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மக்களுடைய வாழ்வாதார திட்டம்; விவசாயிகளின் திட்டம். இதை தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிச்சயம் நிறைவேறி மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்தே தீரும். அதை நிறைவேற்றுவதற்கு பா.ஜ., மக்களுடன் துணை நிற்கும்.
இவ்வாறு, முருகன் கூறினார்.

