/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார்
/
தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார்
ADDED : மார் 25, 2024 12:13 AM
உடுமலை;கிராமங்களில், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த தயக்கம் காட்டுவதுடன், தி.மு.க., வினருக்கு சாதகமாக செயல்படுவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு கடந்த, 16ம் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, நகர, கிராமப்புறங்களில் இருந்த கட்சி பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
உடுமலை நகரில், கட்சி கொடிக்கம்பங்களையும், கட்சியினரே அகற்றிக்கொண்டனர். ஆனால், கிராமப்புறங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, தி.மு.க., வினரின் கொடிக்கம்பங்களை அகற்றாமல், அப்படியே விட்டுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான கிராமங்களில், இதே நிலை உள்ளது. அனிக்கடவு ஊராட்சியில், கொடிக்கம்பம் அகற்றப்படாமல் இருப்பது குறித்து, வி.ஏ.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு, பெரும்பாலான பகுதிகளில், தி.மு.க., வினருக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கும் புகார் மனு அனுப்பி வருகின்றனர்.

