sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு 'கடித்தது'; பிளஸ் 2 மாணவ, மாணவியர் புலம்பல்

/

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு 'கடித்தது'; பிளஸ் 2 மாணவ, மாணவியர் புலம்பல்

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு 'கடித்தது'; பிளஸ் 2 மாணவ, மாணவியர் புலம்பல்

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு 'கடித்தது'; பிளஸ் 2 மாணவ, மாணவியர் புலம்பல்


ADDED : மார் 15, 2025 12:19 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு முழு மதிப்பெண் பெறும் மாணவருக்கு சவால் விடும் வகையில் இருந்தது.மூன்று மதிப்பெண்ணில் கட்டாய வினா கடினமாக இருந்ததால், தேர்வெழுதிய மாணவர்கள் சற்று கவலைஅடைந்தனர்.

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நேற்று நடந்தது. 7,844 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 7,816 பேர் தேர்வெழுதினர்; 28 பேர் தேர்வெழுதவில்லை. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வை, 7,605 பேருக்கு, 7,535 பேர் எழுதினர்; 70 பேர் பங்கேற்கவில்லை.

புள்ளியியல் தேர்வை, 812 பேரும், நுண்ணுயிரியல் தேர்வை, 14 பேரும், சிறப்பு தமிழ் தேர்வை, 31 பேரும், ஹோம் சயின்ஸ் தேர்வை, 85 பேரும், அரசியல் அறிவியல் தேர்வை, 24 பேரும், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்வை, 28 பேரும் எழுதினர்.

தேர்வு குறித்து மாணவியர் கூறியதாவது:

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்


கிருத்திகா: ஒரு மதிப்பெண் வினாக்களில் அனைத்தும் தெரிந்த வினாக்களாக இருந்தது. இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாவும் எளிதாக இருந்தது. படித்திருந்த வினாக்கள் அனைத்தும் வந்திருந்தால், நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பிரியதர்ஷினி: ஒவ்வொரு பகுதியிலும் ஓரிரு வினாக்கள் பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, 60க்கும் மேல் மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் இருந்தது. மூன்று மதிப்பெண் கட்டாய வினா எளிமையாக இருந்ததால், பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ்


பாண்டிச்செல்வி: ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் பரவாயில்லை. மூன்று மதிப்பெண் கட்டாய வினா கடினமாக இருந்தது. இதுவரை கேட்கப்படாத வினா, பாடங்களுக்குள் இருந்து எடுத்து கேட்டிருந்தனர்; யோசித்து விடையளிக்க சிரமமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் பரவாயில்லை.

வர்ஷிகா: முந்தைய ஆண்டுகளின் பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம் பெறாத, கேட்கப்படாத கேள்விகள் மூன்று மதிப்பெண்ணில் கேட்கப்பட்டிருந்தது. கேள்வி கேட்ட விதம் புதுமையாக இருந்தது.

புத்தகத்துக்குள்இருந்து வினாக்கள் வந்திருந்தது. ஐந்து மதிப்பெண்ணில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் வந்திருந்தது; 'தியரி'வரவில்லை; 'புரோகிராம்' வந்திருந்தது.

தேர்ச்சி சதவீதம் குறையாது!


குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கம்ப்யூட்டர் சயின்ஸ்,கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆசிரியர் சாந்தி கூறியதாவது:

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வில் ஒரு மதிப்பெண்ணில் ஒன்று, இரண்டு மதிப்பெண்ணில் இரண்டு, மூன்று மதிப்பெண்ணில் ஒரு வினா என நான்கு வினாக்கள் புத்தகத்துக்குள் இருந்து கேட்டிருந்தனர்.

கட்டாய வினா 'புரோகிராம்' கேள்வி; சிந்தித்து விடை எழுதும் விதமாக இருந்தது. தேர்ச்சி சதவீதம் குறையாது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா முழுமையாகவிடையளித்திருப்பர். மூன்று மதிப்பெண்ணில் கட்டாய வினா (வினா எண்: 33) யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது.

ஐந்து மதிப்பெண்ணில் 'தியரியாக' படித்திருந்த ஒரு வினா, புரோகிராமாக கேட்கப்பட்டிருந்தது.எதிர்பார்க்காத கேள்விகளாக இருந்தாலும், அவற்றுக்கும் விடையளிக்கும் வகையில் தான் இருந்தது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us