/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்கள் மத்தியில் மோதல் தொடர்கிறது! கவுன்சிலிங் வழங்க கமிஷனர் உத்தரவு
/
மாணவர்கள் மத்தியில் மோதல் தொடர்கிறது! கவுன்சிலிங் வழங்க கமிஷனர் உத்தரவு
மாணவர்கள் மத்தியில் மோதல் தொடர்கிறது! கவுன்சிலிங் வழங்க கமிஷனர் உத்தரவு
மாணவர்கள் மத்தியில் மோதல் தொடர்கிறது! கவுன்சிலிங் வழங்க கமிஷனர் உத்தரவு
ADDED : செப் 06, 2024 03:25 AM
திருப்பூர்:திருப்பூர் மாநகரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் மோதி கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கும் திரும்பும் போது, அவ்வப்போது மோதி கொள்வது தொடர்கதையாக உள்ளது. பிடிபடும் மாணவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர்.
நேற்று முன்தினம் மத்திய பஸ் ஸ்டாண்டில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பள்ளியை சேர்ந்த பத்தாம் மற்றும் பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த மாணவர்களும், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களும், இரு குழுக்களாக பிரிந்து மோதி கொண்டனர். அதில், மூன்று மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கையில் கட்டையுடன் வலம் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர்.
'கவுன்சிலிங்' வழங்கல்
-------------------
மாணவர்களின் மோதல் போக்கு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் லட்சுமி எச்சரித்துள்ளார். இதனை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு போலீசார் உள்ளிட்ட குழுவினர் சென்று, மோதலில் ஈடுபட்டவர்களை யார் என கண்டறிந்து அந்த மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்க உத்தரவிட்டுள்ளார்.