/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹாக்கி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
ஹாக்கி போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 13, 2024 10:25 PM

உடுமலை : குறுமைய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், உடுமலையில் குறுமைய அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சூப்பர் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் மாணர்வர்கள் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோல், மாணவியருக்கான ஹாக்கிப்போட்டியில் சூப்பர் சீனியர், சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.