/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனையை பாதுகாக்க தேவை கண்காணிப்பு: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
பனையை பாதுகாக்க தேவை கண்காணிப்பு: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பனையை பாதுகாக்க தேவை கண்காணிப்பு: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
பனையை பாதுகாக்க தேவை கண்காணிப்பு: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 19, 2024 10:56 PM
உடுமலை:நீர்நிலை கரைகளிலுள்ள பனை மரங்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், திருப்பூர் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி, கடந்த, 2018--19ம் ஆண்டில், நீர்நிலை கரைகளில், பனை விதை நடும் திட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதில், ஊராட்சிகள் வாயிலாக பனை விதைகள் வினியோகம் செய்து, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகரைகளில் நடவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில், சராசரியாக, 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், பெரும்பாலான விதைகள் முளைக்கவில்லை. குறைந்தளவு முளை விட்டு, வளர்ச்சி தருணத்திலுள்ள பனை மரங்களும், பராமரிப்பின்றி தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.
குளத்தின் கரைகள் முழுவதும் புதர் மண்டி காணப்படுவதுடன், பல்வேறு களைச்செடிகள் மற்றும் மரங்களின் ஆக்கிரமிப்பாமல், வளர்ந்து வரும் பனை மரங்கள் இருப்பதே தெரியவில்லை. மேலும், நீர்நிலை கரையில், குப்பையை குவித்து தீ வைத்து எரிப்பதால், வளர்ச்சி தருணத்திலுள்ள மரங்கள் கருகும் அவல நிலை உள்ளது.
பல ஊராட்சிகளிலும் இதே நிலையே காணப்படுவதால், இயற்கை ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர். எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், பனை விதை நடவு திட்டத்தின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், தன்னார்வலர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக்குழு அமைத்து, வளர்ந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்.
மரம் வளர்ப்புக்காக, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

