/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடை மீது உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்குகிறது
/
ஓடை மீது உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்குகிறது
ஓடை மீது உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்குகிறது
ஓடை மீது உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்குகிறது
ADDED : செப் 01, 2024 01:41 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட அப்பல்லோ குமரன் நகரில், நகர்ப்புற நல வாழ்வு மையம் செயல்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இம்மையத்தில், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். ஊழியர்கள் வருகைப் பதிவேடு, நோயாளிகள் விவரப் பதிவேடு ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் இருப்பு உள்ளிட்ட விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
n 14வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் காலனி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியையும் கமிஷனர் பார்வையிட்டார்.
n எட்டாவது வார்டு நஞ்சப்பா நகர் பகுதியிலிருந்து, ஜே.வி., டேப்ஸ் ரோடு செல்லும் வழியில் உள்ள ஓடையின் மீது உயர் மட்டப் பாலம் கட்டப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள், மாற்றுப்பாதை அமைத்தல் ஆகியன குறித்து ஆய்வு நடந்தது.