நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ;உடுமலையில், வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளை இணைத்து, பழநி மாவட்டம் உருவாக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த செய்தி, பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அரசு விளக்கம் அளிப்பதோடு, பழநி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய உடுமலையை தலைமையிடமாகக்கொண்டு, சுற்றுப்பகுதிகளை இணைத்து மாவட்டம் உருவாக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.