/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடரும் துாறல் மழை மாடு வரத்து குறைந்தது
/
தொடரும் துாறல் மழை மாடு வரத்து குறைந்தது
ADDED : ஜூலை 16, 2024 12:33 AM
திருப்பூர், ஜூலை 16-
துாறல் மழை துவங்கியுள்ளதால், பசும்புல் தீவனம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் கன்றுகுட்டிகளை விற்பனை செய்யாமல் தோட்டங்களில் கட்டியதால், சந்தைக்கான மாடு வரத்து குறைந்தது.
கடந்த இரண்டு வாரங்களாக, கால்நடை வரத்து, 900 முதல், 950 வரை இருந்த நிலையில், நேற்று அமராவதிபாளையத்தில் நடந்த மாட்டுச்சந்தைக்கு, 886 கால்நடைகள் வரத்தாக இருந்தது. கன்று, 2,500 முதல் 4,000, காளை, 28 ஆயிரம் முதல் 32 ஆயிரத்து, 500, எருது, 27 ஆயிரத்து, 500 முதல், 34 ஆயிரம், மாடுகள், 24 ஆயிரம் முதல் 29 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
வழக்கத்தை விட கன்றுக்குட்டி வரத்து குறைந்த போதும், வாங்கிச் செல்ல கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், விலையில் கிராக்கி நிலவவில்லை. 1.15 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

