/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரளாவில் தொடர் மழை கறிக்கோழி விற்பனை 'டல்'
/
கேரளாவில் தொடர் மழை கறிக்கோழி விற்பனை 'டல்'
ADDED : ஆக 04, 2024 11:09 PM
பல்லடம்,:திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள, 7,000 கறிக்கோழி பண்ணைகள் மூலம், வாரம், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவான, பி.சி.சி., செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:
கேரளாவில் தொடர் மழையால், கோழிக்கோடு, மூணாறு, கோட்டயம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும், தொடர் மழையால், கேரளாவில் மீன் பிடிப்பு பணி தடைபட்டுள்ளதால், மீன் விற்பனைக்கு மாற்றாக, கறிக்கோழி விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் மழையாலும், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாகவும், கேரளாவுக்கு செல்லும் கறிக்கோழிகளில், 20 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளது. சில பகுதிகளுக்கு கோழிக்குஞ்சுகள், தீவனங்கள் அனுப்புவதிலும் சிக்கல் உள்ளது.
மழை தாக்கம் குறையும் பட்சத்தில், கறிக்கோழி விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு சுவாதி கண்ணன் கூறினார்.