/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ள தடுப்புச்சுவர் விவகாரத்தில் சர்ச்சை அமைதி பேச்சு நடத்த முடிவு
/
வெள்ள தடுப்புச்சுவர் விவகாரத்தில் சர்ச்சை அமைதி பேச்சு நடத்த முடிவு
வெள்ள தடுப்புச்சுவர் விவகாரத்தில் சர்ச்சை அமைதி பேச்சு நடத்த முடிவு
வெள்ள தடுப்புச்சுவர் விவகாரத்தில் சர்ச்சை அமைதி பேச்சு நடத்த முடிவு
ADDED : ஆக 19, 2024 11:31 PM

அவிநாசி:அவிநாசி, செம்பியநல்லுார் சாய்கார்டன் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ள தடுப்புச்சுவர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சிக்குட்பட்டு, ஸ்ரீ சாய்கார்டன் வீட்டுமனையில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், அவிநாசி தாசில்தார் மோகனனிடம் மனு வழங்கிய பின், கூறியதாவது:சாய் கார்டன் குடியிருப்பு பகுதியில், 35க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மழையின் போது வேட்டுவபாளையம், அ.குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், இக்குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடும். குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை ஏற்று, 'புரமோட்டர்' வாயிலாக வீட்டுமனையிடத்தை சுற்றி, 3 அடி உயரத்துக்கு கான்கிரீட் தடுப்பு அமைத்து, மழை வெள்ளம் உள்ளே புகாதபடி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில், 'ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பாதையில் தான் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது' எனக்கூறி, அருகேயுள்ள உள்ள நில உரிமையாளர்கள், 'அந்த வெள்ள தடுப்புச்சுவரை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்; அதை வழித்தடமாக அனுமதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, தாசில்தாரிடம் முன்வைத்தனர்; அதையேற்று, ஒரு வாரத்துக்கு முன், வருவாய்த் துறையினர் அறிவுறுத்தலில், வீட்டுமனையிட 'புரமோட்டர்' வாயிலாகவே அந்த தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. இருப்பினும், குடியிருப்புவாசிகள் சார்பில், மீண்டும் அங்கு தடுப்புச்சுவர் கட்டினர்.'அதே பாதையை தான் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்' என, அருகேயுள்ள நில உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குடியிருப்புமனையிடம், தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால், தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டால், மழை வெள்ள பாதிப்புகளை, எதிர்கொள்ள நேரிடும். எனவே, தடுப்புச்சுவர் இடிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்; மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்; அதற்கான வாய்ப்பும் அந்த இடத்தில் இருக்கிறது என வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
21ம் தேதி இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு நடத்தப்படும் என, தாசில்தார் கூறினார்.---
செம்பியநல்லுார் ஊராட்சி, ஸ்ரீசாய்கார்டன் குடியிருப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் மோகனன்.