/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியின் தேர்வு மையமான மாநகராட்சி பள்ளி
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியின் தேர்வு மையமான மாநகராட்சி பள்ளி
எல்.ஆர்.ஜி., கல்லுாரியின் தேர்வு மையமான மாநகராட்சி பள்ளி
எல்.ஆர்.ஜி., கல்லுாரியின் தேர்வு மையமான மாநகராட்சி பள்ளி
ADDED : மே 10, 2024 12:47 AM
திருப்பூர்:திருப்பூர், எல்.ஆர்.ஜி., மாணவியர் கல்லுாரியில் லோக்சபா ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுவதால், அங்கு பயிலும் மாணவியர், பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத உள்ளனர்.
லோக்சபா, சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் உள்ள வகுப்பறையில் வைக்கப் படுகின்றன. ஓட்டு எண்ணிக்கையும் அங்குதான் நடத்தப்படும்.
இந்த முறை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் அங்கு தான் நடக்கிறது. இதனால், கல்லுாரி முழுக்க, மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், போலீசாரின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த கல்லுாரியில் படிக்கும் மாணவியர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தேர்வெழுத உள்ளனர். வரும், 15ல் தேர்வு துவங்க இருக்கிறது; தேர்வெழுதும் மாணவியருக்கு, பழனியம்மாள் பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.
கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமாக கல்லுாரி வளாகம், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே, கல்லுாரி அலுவலகமே தென்னம்பாளையம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் தான் செயல்படுகிறது.
மாணவியர், தேர்வெழுதும் மையத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான், பழனியம்மாள் பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது,' என்றனர்.