ADDED : மே 12, 2024 01:34 AM
திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், திருப்பூரிலுள்ள மாநகராட்சி பள்ளிகள், தேர்ச்சி விகிதத்தில், கடும் சரிவை சந்தித்துள்ன.
திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம், 12 பள்ளிகள் உள்ளது. இவற்றில், நான்கு பள்ளிகள் மட்டுமே, 90 சதவீதத்துக்கு கூடுதலான தேர்ச்சி பெற்றுள்ளது.
பட்டியலில் குறைந்த பட்சமாக சின்னச்சாமி அம்மாள் பள்ளி, 67.60 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது. தேர்வெழுதியவர்களில், 58 பேர் தேர்ச்சியடையவில்லை; 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவியர் பள்ளிகளை பொறுத்த வரை அதிகபட்சமாக ஜெய்வாபாய் பள்ளியில், 733 பேர் தேர்வெழுதினர். இவர்களில், 108 பேர் தேர்ச்சி இல்லை. தேர்ச்சி சதவீதம், 85.27. பழனியம்மாள் பள்ளியில், தேர்வெழுதிய, 31 பேர் தேர்ச்சி பெறவில்லை. 446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம், 93.50. மாணவர் பள்ளியை பொறுத்த வரை, நஞ்சப்பா பள்ளியில், 215 பேர் தேர்வெழுதினர்; 47 பேர் தேர்ச்சி பெறவில்லை; தேர்ச்சி சதவீதம், 78.14.
பத்மாவதிபுரம் பள்ளியில், 143 பேர் தேர்வெழுதி, 21 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 85.31. நொய்யல் வீதி பள்ளியில், 126 பேர் தேர்வெழுதி, 18 பேர் தேர்ச்சி இல்லை. தேர்ச்சி சதவீதம், 85.71. நெசவாளர் காலனி பள்ளியில், 158 பேர் தேர்வெழுதி, 18 பேர் தேர்வாகவில்லை. 88.61 தேர்ச்சி சதவீதம். கே.வி.ஆர்., நகர் பள்ளியில் பத்து பேர் தேர்ச்சி பெறவில்லை; 59 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 85.51. குமார்நகர் மாநகராட்சி பள்ளியில், 261 பேர் தேர்வெழுதினர். 33 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 87.36.
நழுவிய வாய்ப்பு
மாநகராட்சி பள்ளி அளவில் குமரானந்தபுரம் பள்ளி அதிக தேர்ச்சி (97.80) சதவீதத்தை பெற்றுள்ளது. தேர்வெழுதிய, 91 பேரில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை.
இதனால், இப்பள்ளி நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை எட்ட முடியாமல் போனது. புதுராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் தேர்வெழுதிய, 218 பேரில், பத்து பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம், 95.41. கருவம்பாளையம் பள்ளியில், 132 பேரில், ஏழு பேர் தேர்ச்சியாகவில்லை. தேர்ச்சி சதவீதம், 94.70.