sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தரமற்ற வளர்ச்சி பணியால் சில மாதங்களில் சேதம் பொங்கிய கவுன்சிலர்கள்!கடை வாடகை உயர்வால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

/

தரமற்ற வளர்ச்சி பணியால் சில மாதங்களில் சேதம் பொங்கிய கவுன்சிலர்கள்!கடை வாடகை உயர்வால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

தரமற்ற வளர்ச்சி பணியால் சில மாதங்களில் சேதம் பொங்கிய கவுன்சிலர்கள்!கடை வாடகை உயர்வால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு

தரமற்ற வளர்ச்சி பணியால் சில மாதங்களில் சேதம் பொங்கிய கவுன்சிலர்கள்!கடை வாடகை உயர்வால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு


ADDED : செப் 10, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 10, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை நகராட்சி கூட்டத்தில், கடைகளுக்கு வாடகை உயர்த்தியதைக்கண்டித்தும், டெண்டர் விடுவது, தரமற்ற வளர்ச்சி பணிகள் குறித்து காரசார விவாதம் நடந்தது.

உடுமலை நகராட்சி கூட்டம், தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. இதில், நகராட்சி வணிக வளாகங்கள், குத்தகை இனங்களுக்கு, 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 117 கடைகளுக்கு, சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை மறு நிர்ணயம் செய்ய குழு அமைத்து, அக்குழு, 15.5 சதவீதம் வரை வாடகை உயர்த்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலுசாமி (தி.மு.க.,): கடைகளுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சியில், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், 50 முதல், 60 சதவீதம் வரை வாடகை உயர்த்தப்பட்டது.

இதனால், 60 கடைகளுக்கு மேல், 3 ஆண்டுக்கு மேலாக பூட்டியே வைக்கப்பட்டு, நகராட்சிக்கு, 7 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு பின், 3 ஆண்டுக்கு ஒரு முறை, 5 சதவீதம் உயர்த்தப்பட்டது. வாடகையை குறைக்க கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததோடு, தற்போதுள்ள, 32 கடைக்காரர்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

அதற்கு, ஏலம் நடத்தாத நிலையில், மீண்டும், 15.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. ''சன்னியாசம் செல்பவரை அழைத்து, இன்னொரு திருமணம் செய்து கொள்'' என்பது போல் உள்ளது. கடை உரிமையாளர்கள், மக்களிடம் கருத்து கேட்காமல், அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து வாடகை உயர்த்தியுள்ளனர்.

புதிதாக தற்போது கட்டப்பட்ட, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க வணிக வளாக கடைகள், மாதம் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டில், 60 ஆயிரம் முதல், ஒரு லட்சம் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயங்கும் கடைகளும் காலி செய்து விட்டால், வருவாய் இழப்பு மேலும் அதிகரிக்கும். 23 பணிகளுக்கு மேல், டெண்டர் விடாமல், மாதம் தோறும் கால நீடிப்பு செய்யப்படுகிறது.

ஒரு சில நபர்களுக்கு மட்டுமே இது போல், பணி ஒப்படைக்கப்படுகிறது. வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.

டெண்டர் காலம் முடிவதை முன்னதாகவே தெரிந்து, அதற்கு ஏற்ப டெண்டர் வைத்தால், குறையும் வாய்ப்புள்ளது. அவசர அவசியம் கருதி, என பணிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது.

தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 4.79 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு, குத்தகைக்கு விடக்கூடாது. நகராட்சிக்கு சொந்தமான நிலங்களை நேரடியாக விட முடியாது. ஏதாவது வணிக நிறுவனம் அமைத்தால், மீண்டும் வாங்க முடியாது.

நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

துணைத்தலைவர் கலைராஜன் (தி.மு.க.,): பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணி முடிந்தால், வெளியூர் வாகனங்கள், நகருக்குள் வராது. மேலும், மேலும் வாடகை உயர்த்துவது, வியாபாரிகளை மட்டுமின்றி, மக்களையும் பாதிக்கும்.

இவ்வாறு பேசினர்.

தலைவர்: நகராட்சி கடைகளுக்கு வாடகை உயர்த்தும் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டு, அரசுக்கு மறு பரிசீலனை செய்ய அனுப்பி வைக்கப்படும். நகராட்சி நிலம் குத்தகைக்கு விடும் தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.

பெருக்கானை பிடிக்க டெண்டர் விடலாமா?

ஜெயக்குமார் (தி.மு.க.,) : பேவர் பிளாக், கான்கிரீட் ரோடுகள் அமைத்தால், 5 ஆண்டுகள் வரை, பராமரிப்பு பணி மேற்கொள்ளக்கூடாது. ஆனால், தரமற்ற பணி, அதிகாரிகள் மேற்பார்வையிடாதது உள்ளிட்ட காரணங்களினால், சில மாதத்திற்கு முன் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடு, கான்கிரீட் ரோடுகளை, புதுப்பிக்க பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தரமற்ற பணி காரணமாக, 2 மாதம் கூட தாங்குவதில்லை.அதிகாரிகள் தரப்பில், 'எலி, பெருக்கான் உள்ளிட்டவை ஓட்டை அமைப்பதால், சிதிலமடைந்து விடுகின்றன,' என்றனர்.இதற்காக, எலி, பெருக்கானை பிடிக்க ஒரு டெண்டர் வைக்கலாமா, பணி தரமாக செய்தால், அவற்றால் சேதமாகாது. அதிகாரிகள் அலட்சியமே, வளர்ச்சி பணிகளில், தாமதம், உடைந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது.








      Dinamalar
      Follow us