/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாடு விலை குறைந்தது கன்றுக்குட்டிக்கு மவுசு
/
மாடு விலை குறைந்தது கன்றுக்குட்டிக்கு மவுசு
ADDED : ஆக 06, 2024 06:43 AM
திருப்பூர்: திருப்பூர் கால்நடை சந்தையில், மாடு வரத்து குறைந்த போதும், நேற்று மாடுகளை வாங்கிச் செல்ல மொத்த வியாபாரிகள் குறைவாக வந்திருந்தனர்.
வாரந்தோறும் திங்கள்கிழமை கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் கால்நடை சந்தை நடக்கிறது. கடந்த வாரம் சந்தைக்கு, 945 மாடுகள் வந்த நிலையில், நடப்பு வாரம் மாடு வரத்து, 750 ஆக குறைந்துள்ளது. மாடு வரத்து குறைந்த நிலையில், கன்றுக்குட்டிகளுக்கு மவுசு கூடியது. கடந்த வாரத்தை விட, ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து, 5 ஆயிரம் ரூபாய்க்கு கன்றுகுட்டி விற்றது.
காளை விலை, 31 ஆயிரத்தில் இருந்து, 29 ஆயிரமாகவும், எருது விலையும், 32 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரமாகவும் குறைந்தது. மாடு விலையும், 2 ஆயிரம் குறைந்து, 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. கன்றுக்குட்டி தவிர, அனைத்து ரகங்கள் விலை குறைந்த போதும், மாடுகளை வாங்கிச் செல்ல, குறைந்தளவே வியாபாரிகள் வந்திருந்தனர். கடந்த வாரம், 1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்த நிலையில், நேற்று, 1.10 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.