/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றில் முதலைகள் உலா பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்
/
அமராவதி ஆற்றில் முதலைகள் உலா பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்
அமராவதி ஆற்றில் முதலைகள் உலா பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்
அமராவதி ஆற்றில் முதலைகள் உலா பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்
ADDED : பிப் 23, 2025 01:57 AM

உடுமலை:உடுமலை அருகே, அமராவதி ஆற்றில் முதலைகள் சுற்றி வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கல்லாபுரம், கண்ணாடிபுத்துார் பகுதி வழியாக செல்லும் அமராவதி ஆற்றில், ஐந்துக்கும் மேற்பட்ட முதலைகள் சுற்றி வருகின்றன. ஆற்றில் நீந்தி வருவதோடு, படித்துறை, ஆற்றின் நடுவில் அமைந்துள்ள பாறைகள், குடிநீர் திட்ட உறிஞ்சு கிணறுகளில் மேற்பகுதிகளில் முதலைகள் தென்படுகின்றன.
இப்பகுதி கிராம மக்கள், குளிக்க, துணி துவைக்க என ஆற்றை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஆற்றில் இருந்து விவசாய நிலங்களுக்கும் நீர் செல்லும் நிலையில், இங்கிருந்து, மற்ற பகுதிகளுக்கும் முதலைகள் இடம் பெயரும் அபாயம் உள்ளது. ஆற்றில் இறங்கும் மக்களையும், ஆடு, மாடுகளை இரைக்காக கடித்து உட்கொள்ளவும் வாய்ப்புள்ளதால், ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராம மக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமராவதி அணைக்குள் அதிகளவு முதலைகள் உள்ள நிலையில், தண்ணீர் திறக்கும் போது, நீருடன் சேர்ந்த வெளியேறி வந்திருக்கலாம். ஆற்றுக்குள் ஒரு மாதமாக முதலைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, வனத்துறையினர், முதலைகளை பாதுகாப்பாக பிடித்து அணையினுள்ளோ, அல்லது அமராவதி முதலைப்பண்ணையிலோ விடுவிக்க வேண்டும். ஆற்றின் வழியோர கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.