/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சி.யூ.இ.டி., தேர்வு மாணவர்கள் ஆர்வம்
/
சி.யூ.இ.டி., தேர்வு மாணவர்கள் ஆர்வம்
ADDED : மே 24, 2024 12:23 AM

திருப்பூர்;'சி.யூ.இ.டி.,' எனப்படும் பொது பல்கலை.,களுக்கான நுழைவு தேர்வுக்கான இணைய வழி தேர்வு நிறைவு பெற்றது.
நடப்பு ஆண்டுக்கான (2024) சி.யூ.இ.டி., தேர்வு, கடந்த, 15ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடந்தது. 'பென் அண்ட் பேப்பர்' முறையில் இத்தேர்வு நடந்தது. தொடர்ச்சியாக, கடந்த, 21ம் தேதி துவங்கி, இன்று (24ம் தேதி) வரை 'சி.பி.டி.,' எனப்படும் இணைய வழி கம்ப்யூட்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூரில், குமரன் மகளிர் கல்லுாரி மற்றும் பல்லடம் அம்பாள் புரொபஷனல் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் கல்லுாரிகளில் நடைபெற்று வருகிறது.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இத்தேர்வை, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள கே.எம்.சி., பள்ளி தலைமை முதல்வர் மற்றும் செயலாளர் மனோகரன் கண்காணித்து வருகிறார். தேர்வு, 3 சுற்று நடைபெறுகிறது. 20 மொழிப்பாடங்கள், 29 பிற பாடங்கள், ஒரு தொழிற் கல்வி பாடம் என, 50 பாடங்களுக்கான இணைய வழி தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள், 'நீட்' தேர்வுக்குரிய நடை முறைகள் பின்பற்றப்பட்டு, கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
''பொது பல்கலை.,யில் சேர்வதற்கான வாய்ப்பை, வரும் ஆண்டுகளில் அதிகளவு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறினார்.