/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் படைவீரர் குடும்பத்தினரே...
/
முன்னாள் படைவீரர் குடும்பத்தினரே...
ADDED : ஜூலை 05, 2024 11:28 PM
திருப்பூர்:தையல் பயிற்சி முடித்த சான்றிதழை நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணம் ஆகாத மகள்கள், மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து அதற்கான சான்றுகளை, படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் இயங்கும், மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0421 297112 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.