/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வதந் 'தீ' உரிமைத்தொகை திட்ட மனு கொடுக்க வந்து ஏமாந்த பெண்கள்
/
வதந் 'தீ' உரிமைத்தொகை திட்ட மனு கொடுக்க வந்து ஏமாந்த பெண்கள்
வதந் 'தீ' உரிமைத்தொகை திட்ட மனு கொடுக்க வந்து ஏமாந்த பெண்கள்
வதந் 'தீ' உரிமைத்தொகை திட்ட மனு கொடுக்க வந்து ஏமாந்த பெண்கள்
ADDED : ஆக 18, 2024 12:25 AM

திருப்பூர்;'மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மனுக்களை கொடுக்கலாம்' என, வதந்தி பரவியதால், கிராமப்புறத்தை சேர்ந்த பெண்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழக அரசு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு, மாதம், 1,000 ரூபாய், உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில், ஏராளமான பெண்கள் விடுபட்டுள்ளனர். மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமென, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில், 17, 19, 20 ஆகிய தேதிகளில், கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடப்பதாக வதந்தி பரவியது. மூன்று நாட்களுக்கு மட்டும் நடக்குமென தெரிவிக்கப்பட்டிருந்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், நேற்று மனுகொடுக்க வந்திருந்தனர்.
பெருமாநல்லுார், தாராபுரம், காங்கயம் என, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் நேற்று மனு கொடுக்க வந்தனர். அதுபோன்ற சிறப்பு முகாம் எதுவும் நடப்பதில்லை; மக்கள் குறைகேட்பு நாளில் மனு கொடுக்கலாம் என, அரசு அலுவலர்கள் விளக்கினர். இதன்காரணமாக, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) மலரிடம் கேட்ட போது, ''சமூக வலைதளம் வாயிலாக தவறான தகவல் பரவியுள்ளதை நம்பி, பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். தவறான தகவல் என்று சொன்னோம். உடனே, திரும்பி சென்றுவிட்டனர்,'' என்றார்.
இதேபோல், பல்வேறு மாவட்டங்களிலும் வதந்தி காரணமாக, கலெக்டர் அலுவலகங்களில், பெண்கள் குவிந்துள்ளனர்.

