sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் சாலை தடை கோரும் வழக்கில் இணைய முடிவு

/

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் சாலை தடை கோரும் வழக்கில் இணைய முடிவு

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் சாலை தடை கோரும் வழக்கில் இணைய முடிவு

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மண் சாலை தடை கோரும் வழக்கில் இணைய முடிவு


ADDED : ஆக 26, 2024 01:20 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;புலிகள் காப்பகத்தில் சாலை அமைக்க தடை கோரும் வழக்கில், தங்களையும் வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும், என, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை, மேல் குருமலை ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 1,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களின் பல கட்ட போராட்டத்துக்கு பின், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் மண் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், சாலை அமைக்க தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள், தங்களையும் வாதியாக சேர்த்துக்கொள்ள மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணை செயலாளர் செல்வன் கூறியதாவது:

மலைவாழ் மக்கள், மருத்துவம், கல்வி, உணவு என அனைத்து தேவைகளுக்கும்,மேல் ஆழியாறு, அட்டகட்டி வழியாக, கரடு, முரடான மலைப்பாதையில், 60 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் பொதுமக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல், கடந்த, ஒரு ஆண்டில், 20 பேர் இறந்துள்ளனர். கல்வி வசதியின்றி, இளம் தலைமுறை பாதிக்கப்படுகிறது.

எனவே, 2006 வன உரிமை சட்டப்படி, பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த, திருமூர்த்திமலையிலிருந்து குருமலை செல்லும் வழித்தடத்தை அமைத்து தர வேண்டும், என பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதிகாரிகள் எங்களின் வேதனையை உணர்ந்து, சட்டத்திற்கு உட்பட்டு, வன உரிமைக்குழு தீர்மானங்கள் அடிப்படையில், மண் சாலை அமைக்க நிதி ஒதுக்கினர்.

இதில், குடியிருப்புகளை இணைக்கும், 2 கி.மீ., பாதை, திருமூர்த்திமலையில் இருந்து குருமலை வரை, 3.15 கி.மீ., சாலை மற்றும் விளை நிலங்களை இணைக்கும், ஒரு கி.மீ.,துாரம் மண் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த பாதை அமைந்தாலும், பொது வழிப்பாதையாக இருக்காது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வனத்துறை கட்டுப்பாட்டில், சோதனைச்சாவடியும் இருக்கும். மண் பாதை என்பதால், வன விலங்குகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.

மலையடிவாரத்தில், வனத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மற்றும் வனத்துறையினர் சிலர் சதியால், சிக்கல் ஏற்படுத்தப்படுகிறது.

இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கில், மலைவாழ் மக்களையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள மனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு, கூறினார்.






      Dinamalar
      Follow us