/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கம்பம் அகற்றுவதில் தாமதம்: பொதுமக்களுக்கு தொடரும் பாதிப்பு
/
மின் கம்பம் அகற்றுவதில் தாமதம்: பொதுமக்களுக்கு தொடரும் பாதிப்பு
மின் கம்பம் அகற்றுவதில் தாமதம்: பொதுமக்களுக்கு தொடரும் பாதிப்பு
மின் கம்பம் அகற்றுவதில் தாமதம்: பொதுமக்களுக்கு தொடரும் பாதிப்பு
ADDED : மே 05, 2024 12:13 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 7வது வார்டு, நஞ்சப்பா நகரில் இருந்து, பாரதி நகர் செல்லும் ரோடு மாநகராட்சி சார்பில், புதுப்பிக்கப்பட்டது.
ரோட்டை புதுப்பிக்கும் போது, ரோட்டில் மத்தியில் இருந்த மின் கம்பத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியே ரோட்டை அமைத்து விட்டனர்.
அந்த ரோட்டில் அதிகப்படியான பனியன் நிறுவனங்கள் உள்ளன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதி. இதனால் மின் கம்பத்தால், விபத்து ஏற்படுகிறது. ரோட்டின் மத்தியில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை இடமாற்றம் செய்ய, மதிப்பீடு தயார் செய்து அதற்கான பணத்தை செலுத்துமாறு மாநகராட்சிக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகராட்சி சார்பில், மின் வாரிய அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்பட்டது. உடனே மின் வாரிய அதிகாரிகள் ரோட்டில் உள்ள மின் கம்பத்தின் அருகில் ரோட்டோரத்தில் புதிய மின் கம்பத்தை நட்டி மின் பணியை முடித்து விட்டனர். ஆனால் ரோட்டில் உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே விட்டுள்ளனர்.
விபத்தை தடுக்கவே மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்றோம். ஆனால் மின் வாரியத்தினர் மின் கம்பத்தை அகற்றாமல் விட்டுள்ளது. விபத்து தொடரவே வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.